அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் விரைவாக சேவைகளை பெற புதிய மையங்கள்

இந்திய அரசின் புதிய நடவடிக்கையின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த அமீரக குடியிருப்பாளர்கள் வரும் 2024 ம் ஆண்டு முதல் புதிய ஒருங்கிணைந்த மையத்தின் கிளைகளில் இருந்து பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவைகளைப் பெற முடியும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அதன் சேவைகளை நெறிப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் மேம்பட்ட செயல்திறன் மற்றும் எளிதான அணுகல் ஆகியவற்றை உறுதி செய்யவும் புதிய மையங்களை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் அமீரகத்தில் வசித்து வரும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு விரைவாகவும். வெளிப்படையாகவும் சேவை வழங்கப்படும். இந்த புதிய சேவை நிறைவேறினால் இது அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



