அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோயில் குறித்த தகவலை கேட்டறிந்த பிரதமர் மோடி!

அபுதாபியில் மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்துக் கல் கோயிலின் கட்டுமானப் பணிகள் மற்றும் கோயிலைத் திறப்பது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் BAPS இந்து மந்திர் தலைவர் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் ஆகியோர் விவாதித்தனர்.
புது தில்லியில் நடைபெற்ற 30 நிமிட சந்திப்பில், பிப்ரவரி 14, 2024 அன்று அபுதாபியின் அபு முரைக்கா பகுதியில் உள்ள பிரமாண்டக் கோயிலின் திறப்பு விழாவை ‘நல்லிணக்கத்தின் திருவிழா’ -வாக கொண்டாடுவது பற்றிய விவரங்களை பிரம்மவிஹாரிதாஸ் மோடியிடம் தெரிவித்தார். பின்னர், “அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாக” போற்றப்படும் வரலாற்று சிறப்புமிக்க அபுதாபி கோவிலின் 3டி அச்சிடப்பட்ட மாதிரி மோடிக்கு வழங்கப்பட்டது.
மேலும், பிரம்மவிஹாரிதாஸ், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திரில் நடந்து வரும் ‘உத்வேகத்தின் திருவிழா’ குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.